ஸ்டீராய்ட்கள் தசை வெறியர்களை கொல்கிறது

ஸ்டீராய்ட்கள் தசை வெறியர்களை கொல்கிறது

30ஐ நெருங்கும் மற்றும் முப்பதுகளின் ஆரம்பகட்ட வயதிலுள்ள பல ஆண்கள், ஸ்டீராய்டுகளை(ஊக்க மருந்துகள்), தவறாக பயன்படுத்துவதால், தீவிரமான இதய நோய்களுக்கு ஆளாகி இறந்து கொண்டிருக்கிறார்கள் என, ஒரு நியூ சௌத் வேல்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகரிக்கும் ஸ்டீராய்டு பயனர்களுக்கு அதனால் ஏற்படும் உடல் ரீதியான அபாயங்கள் குறித்து அறிந்திருக்கவில்லையென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். செயல் திறன் அதிகாரிக்கும் ஊக்க மருந்துகளால் இதய நோய், இனப்பெருக்க குறைபாடு, கல்லீரல் பாதிப்பு, போன்ற அபாயங்கள் ஏற்படும் நிலை கவலையளிக்கிறதென ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆஸ்த்ரேலியாவிலுள்ள நியூ சௌத் வேல்ஸ் பலகலைக்கழகத்தின் தேசீய போதை மருந்து மற்றும் மது ஆராய்சி மைய பேராசிரியர், ஷேன் டார்க் என்பவர் சொல்கிறார் " ஸ்டீராய்டு பயனர்கள் பெரும்பாலும் உடல் நல நாட்டமுள்ளவர்கள், ஆனால் அவர்கள் பயன்படுத்தும் ஊக்க மருந்துகள்,அவர்களை கொல்லும் அளவிற்கு உடலை சேதப்படுதுமென்பது தான் இதில் பெரிய முரண் "

கடந்த 17 ஆண்டுகளில் நியூ சௌத் வேல்ஸில் இறந்த, 22 வயது முதல் 48 வயது வரையுள்ள 24 ஆண்களின் உடல்களில் ஸ்டீராய்டு இருந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது.

பெரும்பாலும் தனிப்பட்ட பயிற்சியாளர்கள்,பாடிபில்டர்கள் மற்றும் காவலர்கள் போன்ற அனைத்து ஆண்களிடமும் அதிக அளவில் ஸ்டீராய்டுகளை தவறாக பயன்படுத்தியதற்கான அறிகுறிகுறிகளான அதிக அளவு வளர்ச்சியடைந்த தசைகள் மற்றும் சுருங்கிய தழும்புகளுடன் கூடிய விதைப்பைகள் காணப்பட்டன.

பேராசிரியர் டார்க் சொல்கிறார் "இந்த ஆண்கள் அவர்களின் இதயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவித்து, அவர்கள் இறப்பதற்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கிறார்கள்"

"முப்பதுகளின் ஆரம்பகட்ட வயதிலுள்ள ஒரு இள வயது குழுவின் இதய ஆரோக்கியத்தை பார்த்தால், ஏதோ அவர்களை விட இரட்டிப்பு வயதுள்ளவர்களின் நிலமையை காணலாம்"

பகுப்பாய்வு செய்ததில் ஐம்பது விழுக்காடுக்கும் அதிகமான ஆண்களுக்கு விதை பைகள் சுருங்கியிருந்தது, இது அவர்களின் இனப்பெருக்க மண்டலத்தை பெரும் பாதிப்புள்ளாக்கும்.

ஸ்டீராய்டுகள் மரணத்திற்கான நேரடி காரணமாக இல்லாமலிருந்தாலும் கூட, 62.5 விழுக்காடு ஆண்கள், அவ்ர்களுக்கு இதய நோய் இருந்ததா இல்லையா என்ற உண்மை நீங்கலாக,நச்சுத்தன்மை அதிகமுள்ள ஸ்டீராய்டுகளை, சட்டவிரோதமான போதை மருந்துகளான கொக்கெயின் மற்றும் மெத்தாம்பெடாமைனுடன் சேர்த்து உட்கொண்டு இறந்திருக்கிறார்கள். அவர்களில் பாதி பேருக்கு தடித்த தமனிகள் மற்றும் சேதமடைந்த இதய தசைகளுடன் கூடிய கடுமையான இதய நோய் இருந்தது. அந்த மரணங்களில் நான்கில் ஒரு பங்கு தற்கொலையாகவோ அல்லது ஆட்கொலையாகவோ இருந்ததுள்ளது என சொல்கிறார் பேராசிரியர் டார்க். மேலும் நீண்ட நாள் ஸ்டீராய்டு பயன்பாட்டை, விரக்தி மற்றும் தீவிரமான வன்முறை நடத்தையுடன் அவர் தொடர்பு படுத்துகிறார். :"ஸ்டீராய்டு சீற்றம்" இரண்டு வழிகளில் வேலை செய்கிறதென அவர் சொல்கிறார். "அந்த சீற்றம் அவர்களுக்கு எதிராகவோ அல்லது மற்றவர்களுக்கு எதிராகவோ இருக்கலாம்- மன நிலை மாற்றங்கள், மன சிதைவுகள் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்றவை ஸ்டீராய்டுகளினால் ஏற்படலாம் என்பதை ஸ்டீராய்டு பயனர்கள் தெரிந்து கொண்டால் நல்லது." கல்லீரல் பாதிப்பு மற்றும் அட்ரீனல் சோர்வு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதின் பேரில்,ஜேமி குளோஸ் என்ற 42 வயது தனி பயிற்சியாளர் ஸ்டீராய்டு உட்கொள்ளுவதை நிறுத்தினார். 28 வயதில்,அவ்ர் ஒரு உடற்பயிற்சிக் கூடம் நடத்தி கொண்ண்டிருந்த போது போது ஸ்டீராய்டு பயன்படுத்த ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்கு ஒன்று என இருந்த ஸ்டீராய்டு ஊசி மருந்து, பின்பு நாளடைவில் ஒரு நாளைக்கு ஒன்று என மாறியது. "எனது உடல் நல அபாயங்கள் குறித்து எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. நான் வெள்ளந்தியாக இருந்தேன். இதிலிருந்து மற்றொன்று கிடைக்கும் என நினைத்தேன். பெரிதாகவும் வலிமையாகவும் ஆகலாமென நினைத்தேன். ஆனால் அது சரியானதாக இல்லை. மன நிலை மாற்றங்கள் எனக்கு தொடரந்து ஏற்பட்டது. எனது முடி சன்னமாக தொடங்கியது" " ஸ்டீராய்டு வழக்கமாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தபடுவதில்லை. ஆனால் இந்த ஆய்வு ஸ்டீராய்டு பயன்பாட்டின் "மறைக்கபட்ட" பகுதியை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

RELATED ARTICLES

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Please note, comments must be approved before they are published