ஒருவர் ஒரு நாளில் அல்லது ஒரே சமயத்தில் எத்தனை முட்டைகளை உண்ணலாம்?
ஒரு நாளில் 20-30 முட்டைகள் அல்லது அதற்கும் மேல் உண்ணுகிறார்கள் என்று சிலர் (சத்துணவு நிபுணர் + உடற்கட்டு நிபுணராக தன்னைத்தானே அறிவித்துக் கொள்பவர்கள்) சொல்லுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. அவர்களுக்கு அது மிக அதிக தசைப்பற்றை அளிக்கிறது என்று இந்த புரதச்சத்து வெறியர்கள் சொல்லுவதை செவிமடுக்கும்போது உண்மையாகவே வேடிக்கையாக இருக்கிறது. உண்மை என்னவென்றால் அவர்களால் அதை அனைத்தையும் சீரணிக்க முடியாது மற்றும் அதில் செரிக்கப்படாத 80% உணவு கழிவறைக்கு சென்றுவிடுகிறது. அது ஒருவரை ஒரு சிறந்த உர உற்பத்தியாளராக மாற்றிவிடுகிறது.
உண்மை என்னவென்றால் உடலில் கொழுப்புச்சத்து 15% அளவுடன் 100 கிலோ எடை கொண்ட ஒருவரால் கூட ஒரே சமயத்தில் 30 கிராம் புரதச்சத்திற்கு அதிகமாகவும், ஒரு நாளில் மொத்தத்தமாக 130 கிராமிலிருந்து 160 கிராமுக்கு அதிகமாகவும் சீரணிக்கமுடியாது. 70 கிலோ எடையுள்ள ஒருவருக்கு ஒரு நாளின் மொத்த தேவை 100 கிராம் மட்டுமே. மேலும் அது ஒரு சமயத்தில் 20 கிராமுக்கு மிகாது இருக்கும். புரதச்சத்து முட்டையில் அல்லது பொடிக்கப்பட்ட தயிரில் மட்டுமே உள்ளது என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர்கள் குழப்பத்திலும்,மன அழுத்தத்திலும், மற்றும் தவறான தகவல்களை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். புரதச்சத்தானது பொதுவாக பால்,பருப்பு வகைகள், கோதுமை, கொட்டைவகைகள், அரிசி, இலைக்காய்கறிகள் மற்றும் அனைத்து அசைவ உணவுகளிலும் இருக்கிறது. பின் எவ்வாறு முட்டை அல்லது புரதமாவுகள் மட்டுமே புரதச்சத்திற்கான மூலாதாரமாக கருதப்படுகிறது?
முட்டைகள்: சராசரியாக 50 கிராம் எடையுள்ள ஒரு முட்டை 80 வெப்ப அலகை(கலோரி) அளிக்கிறது. அது 5 கிராம் கொழுப்புசத்தும்(முழுமையாக மஞ்சள் கருவிலும் சிறிதளவு வெள்ளை கருவிலும்) 6 கிராம் புரதச்சத்தும்,(முழுமையாக வெள்ளைக்கருவிலும் சிறிதளவு மஞ்சள் கருவிலும்) 0.5 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்தும், மற்றும் 215 கிராம் இரத்தக்கொழுப்பும்(கொலஸ்ட்ரால்) கொண்டது.
இதிலிருந்து ஒரு 6 முட்டைகள் மொத்தமாக 1300 மில்லி கிராம் இரத்த கொழுப்பையும், 36 கிராம் புரதச்சத்தையும், அளிப்பது தெளிவாகிறது. இது ஒரு வேளைக்கான தேவைக்கு அதிகமானதும் நமது குடல் நாளங்கள் (உட்குடல்) செரிப்பதற்கு கடினமானதும் ஆகும். மற்றும் ஒரே வகையிலான புரதச்சத்து எப்பொழுதுமே ஒரே சமயத்தில் செரிக்கப்படுவதில்லை என்பது அனைவருக்கும் ஆர்வத்தைத்தரும் ஒரு செய்தி. மனிதன் தாவர உணவையும், மற்றும் மாமிச உணவையும் (அனைத்தும் உண்ணுகிறவன்) உண்ணுகிறவன். மனித இனத்தின் குடலிலுள்ள நொதியூக்கிகளின்(என்ஸைம்) விகிதம் உடலின் அமினோ அமிலங்களின் அளவுக் குறியீடுகளை நிறைவு செய்யத்தேவையான தாவர மற்றும் மாமிச புரதங்கள் இருக்கச்செய்யுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே மனிதனின் உணவில் தாவர உணவு + பால் அல்லது முட்டை அல்லது மாமிசம்(அசைவ உணவு) மற்றும் சிலவற்றை கொண்டு முழுமையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அமினோ அமிலங்களின் அளவுக்குறியீடுகள், தாதுக்கள், வைட்டமின்கள், அரிதானத் தனிமங்கள்(ட்ரேஸ் எலிமெண்ட்ஸ்) ஆகியவை முழுமையாகப் பெறப்பட்டு வளர்ச்சியை, ஆரோக்கியத்தை மீட்டெடுக்க சிறப்பாக செயல்படும். உங்கள் தசைப்பற்றை அதிகரிக்க 20-30-40 முட்டைகள் உதவும் என்பதற்கு ஆதாரமாக எந்த ஒரு ஆய்வு முடிவும் இல்லை. ஒரு வாரத்தில் 3- 4 முறை 2-3 முட்டைகளை உண்ணுவது சிறந்தது. அது , ஒமேகா கொழுப்பு அமிலங்கள், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், உயர் அடர்த்தி கொழுப்பு குறியீட்டளவு போன்ற முட்டையிலுள்ள நுண் கலவைக் கூறுகளின் செயல்பாடுகளை சிறக்கச் செய்கிறது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள் இருக்கின்றன. இந்த நுண் கலவைக் கூறுகளின் அளவுகள் அதிகரித்தால் பாதிக்ககூடிய விளைவுகளையும் ஏற்படுத்தலாம். மிகச்சிறந்த சரியான அளவானது ஒரு நாளில் 2-3 வேளைகளுக்கு சிறு தானியங்கள், கொட்டைகள், பால், பச்சைக்காய்கறிக் கலவை இவைகளுடன் 2-4 முட்டைகளை உணவாகக்கொள்ள வேண்டும்.
மிக அதிக எண்ணிக்கையிலான முட்டைகளின் மீது பணத்தை விரையம் செய்யாதீர்கள். 50%சிறு தானியங்கள், 20% பயறு வகைகள், பால், மற்றும் 20% அசைவ உணவு அடங்கிய உணவை வருடம் முழுவதும் உட்கொள்ள வலியுறுத்துங்கள். மற்றும் அனைத்தும் அடங்கிய 6 – 8 சிறு உணவுகளாக நாள் முழுவதுக்குமாக உண்ணுங்கள்.